Published : 16 Apr 2023 06:35 AM
Last Updated : 16 Apr 2023 06:35 AM

காவலரின் 10 வயது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக புகார் - மருத்துவ கல்வி இயக்குநரகம் விசாரணைக்கு பரிந்துரை

சென்னை: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தலைமைக் காவலரின் 10 வயது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகம் விசாரணை நடத்த காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

ஆவடி காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் கோதண்டபாணி, சென்னை, ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். கடந்த 13-ம்தேதி சென்னை தலைமைச் செயலகம் அருகே தனது மகள் பிரதிஷாவுடன் (10) சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், தனது மகள் பிரதிஷாவுக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கவிலை: இதனால், மகளுக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டு, வலது காலும், இடது கையும் செயலிழந்துள்ளது. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவிலை. காவல்துறை, சுகாதாரத்துறையில் பெற்றோர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவினர் விசாரணை நடத்தி, தவறு நடந்திருப்பது உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தலைமைக் காவலர் கோதண்டபாணியின் புகாரை பெற்றுக்கொண்ட ஓட்டேரிகாவல் துறையினர், பிரதிஷாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்து விசாரணை நடத்தமருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இதையடுத்து, மருத்துவக் குழு அமைக்கப்பட்டு, சிறுமியின் அனைத்து சிகிச்சைகளும் ஆய்வு செய்யவும், சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x