Published : 15 Apr 2023 06:11 PM
Last Updated : 15 Apr 2023 06:11 PM
சென்னை: திமுக தொகுதி பார்வையாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
திமுகவில் புதிதாக 1 கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகளை கண்காணிக்கவும் 234 தொகுதிகளுக்கும் புதிதாக பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தொகுதி பார்வையாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான தொகுதி பார்வையாளர்களுடன் இன்றைய சந்திப்பில் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். 2 கோடி உறுப்பினர் என்ற நம் இலக்கை விரைந்து அடைய அவர்களுக்கு ஊக்கமளித்தேன்" என்று அதில் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான தொகுதி பார்வையாளர்களுடன் இன்றைய சந்திப்பில் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.
2 கோடி உறுப்பினர் என்ற நம் இலக்கை விரைந்து அடைய அவர்களுக்கு ஊக்கமளித்தேன். pic.twitter.com/liWRexSRZQ— M.K.Stalin (@mkstalin) April 15, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT