Last Updated : 13 Apr, 2023 01:50 PM

4  

Published : 13 Apr 2023 01:50 PM
Last Updated : 13 Apr 2023 01:50 PM

பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் தமிழக வீரர் கமலேஷ் வீரமரணம்: சோகத்தில் சேலம் பனங்காடு கிராம மக்கள்

உள்படம் சேலம் ராணுவ வீரர் கமலேஷ்

மேட்டூர்: பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பீரங்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த சேலம் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அவரது சொந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று (ஏப்.12) அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டில் பீரங்கி படைப் பிரிவை சேர்ந்த கமலேஷ் (24), யோகேஷ் குமார் (24), சந்தோஷ் நகரல் (25) மற்றும் சாகர் பன்னே (25) ஆகியோர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷ் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இவரது தந்தை ரவி நெசவுத் தொழிலாளி, தாய் செல்வமணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 வது மகனான கமலேஷ், சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், தொடர் முயற்சியால் ராணுவத்தில் சேர்ந்து பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார்.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்து சென்ற கமலேஷ், நேற்று அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த செய்தி அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் மசக்காளியூர் பனங்காடு கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதனிடையே, வீரர் உயிரிழந்த செய்தி அறிந்த கிராம மக்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டு வருகின்றனர். வீரர் கமலேஷின் உடல் இன்று மாலை அல்லது நாளை காலை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரர் கமலேஷின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 4 Comments )
  • பாலரத்னா

    இந்த மரணத்தின் பின்னணி என்ன என்பதை ராணுவம் வெளியிட மறுக்கிறது. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் எல்லையை பாதுகாக்க நடக்கும் சண்டையின் போது மரணமடைந்தால் அதனை வீர மரணம் என்றும் அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதிலும் கருத்து மாறுபாடு கிடையாது. ஆனால் பணியின்போது வேறு வகையில் உயிர் இழந்தால் அவர்களுக்கு இந்த மரியாதை கொடுக்கப்பட வேண்டுமா ராணுவத்தில் இருப்பவர்கள் எல்லையை பாதுகாக்கிறார்கள் என்றால் உள்நாட்டில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் காவல்துறையினர் செயல்படுகிறார்கள்.மின் தடங்கல் ஏற்பட்டால் அனைத்து செயல்களுக்குமே பாதிப்பு என்ற நிலையில் மின்பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். உயிரை காக்கும் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபடுகின்றனர். பணியின்போது இவர்கள் யாரவது இறந்தால் அவர்களுக்கெல்லாம் எந்த மரியாதையும் கிடைப்பது இல்லை. அத்தியாவசிய பணியில் இருக்கும் இவர்களுக்கெல்லாம் கிடைக்காத மரியாதை ராணுவத்தில் பணி புரிந்தவர் இறந்தார் என்பதற்காகவே அவர்களுக்கு அரசு மரியாதைகள் கொடுப்பது ஒருதலை பட்சமாக இருக்கிறது.

  • R
    R.Anbazhagan Anbu

    So sad, RIP

 
x
News Hub
Icon