Published : 10 Apr 2023 05:22 PM Last Updated : 10 Apr 2023 05:22 PM
நூலக வசதி, உணவு முறையை மாற்ற ரூ.26 கோடி - தமிழக சிறைத் துறையின் புதிய அறிவிப்புகள்
சென்னை: சிறைவாசிகளுக்கான உணவு முறையை மாற்றும் திட்டம் ரூ.26 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சிறைத் துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.10 ) சட்டத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிப்புகளை வெளியிட்டார். இதில் சிறைத் துறை அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள், மாவட்ட சிறை மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி ஆகிவற்றில் நூலக வசதி ஏற்படுத்தப்படும்.
சிறைத் துறையில் பணிபுரியும் முதல் நிலை மற்றும் 2வது நிலை காவலர்களுக்கான மிகை நேர பணிக்கான ஊதியம் காவல் துறை ஆளிநர்களுக்கு இணையாக ரூ.200-லிருந்து ரூ.500 ஆக ரூ.3.24 கோடி செலவில் உயர்த்தி வழங்கப்படும்.
சிறைத் துறையில் பணியாளர்களுக்கான இடர் படி காவல் துறை பணியாளர்களுக்கு இணையாக ரூ.800-லிருந்து ரூ.1000-ஆக ரூ.1.06 கோடி செலவில் உயர்த்தி வழங்கப்படும்.
ஆத்தூர், திண்டுக்கல், விருதுநகர், நாகர்கோவில், நாகை, ராமநாதபுரம், கோபி, செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்ட சிறைகள், 105 கிளைச் சிறைகளில் சிசிடிவி கேமரா மற்றும் 9 மத்திய சிறைகளில் காணொளிச் சுவர் வசதி ரூ.11.50 கோடி செலவில் அமைக்கப்படும்.
தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைகளுக்கு எடுத்து வருவதை கண்டறிய 13 மாவட்ட சிறைகளுக்கு ரூ.2.73 கோடி செலவில் x ray baggage scanner வழங்கப்படும்.
சிறைவாசிகளின் நலுனுக்காக நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உணவு முறை மற்றும் உணவின் அளவினை மாற்றி வழங்கிடும் பொருட்டு ஆண்டுக்கு ரூ.26 கோடிக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் ஆடியோ கால் வசதி 3 நாட்களுக்கு ஒருமுறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்புக்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, வீடியோ கால் வசதியும் புதிதாக ஏற்படுத்தப்படும்.
சிறைவாசிகள் தயார் செய்யும் பொருட்கள் freedom என்ற பெயரில் காவலர் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும்.
WRITE A COMMENT