Published : 10 Apr 2023 06:12 AM
Last Updated : 10 Apr 2023 06:12 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தை 2-ஆக பிரிக்க வலியுறுத்தி பாமக சார்பில் திருவண்ணாமலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது: மக்களின் உணர்வை புரிந்து கொண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-ஆக பிரிக்க வேண்டும். இதேபோல், திருவள்ளூர், சேலம், கடலூர், கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும்.
என்எல்சி நிறுவனத்தின் 3 சுரங்கங்களை ஏல பட்டியலில் இருந்து நீக்கிவிட்டதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 3 முறை ஏலம் விடப்பட்டும், ஏலம் எடுக்க யாரும் முன் வராததால், பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். ரத்து செய்யப்படும் என அறிவிக்கவில்லை. இது தெரியாமல் வெற்றி, வெற்றி என திமுக, பாஜக கட்சிகள் கூறுகின்றன.
தமிழகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 6 நிலக்கரி சுரங்கங்கள், என்எல்சி சுரங்க விரிவாக்க திட்டம், 66 ஆண்டுகளாக உள்ள என்எல்சி நிறுவனத்தால் விவசாயம், சுற்றுச்சூழல், நீர் பாதிப்பு குறித்து சென்னை ஐஐடி குழு மூலமாக ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். சட்டப்பேரவையில் அறிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT