Published : 01 Sep 2017 12:38 PM
Last Updated : 01 Sep 2017 12:38 PM
வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் தங்கள்வசம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டிகள் அனைவரும் இன்று (செப்டம்பர் 1) முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். டிஜி லாக்கர் முறை ஏற்றுக்கொள்ளப்படாது என்று போலீஸார் தெரிவித்துள்ள நிலையில் உயர் நீதிமன்றம் இக்கருத்தை வெளியிட்டுள்ளது.
வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், "
அப்போது நீதிபதி எம்.துரைசாமி கூறியதாவது: மோட்டார் வாகன சட்டம் 139 பிரிவின்படி வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியிருக்க வாகன ஓட்டிகளுக்கு இப்படியொரு கெடுபிடியை தமிழக அரசு விதிக்கக் காரணம் என்ன? விபத்துகளைத் தடுக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கும்போது அரசு ஏன் இதை தேர்வு செய்யும் வேண்டும்" என வினவினார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இது தொடர்பாக அரசு தரப்பு விளக்கத்தைப் பெற்றுத்தர கால அவகாசம் தேவை" எனக் கோரினார். பிற்பகல் 2.15 மணிக்குள் விளக்கமளிக்குமாறு நீதிபதி அவகாசம் வழங்கினார்.
இந்த வழக்கில் இன்று பிற்பகல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT