Published : 07 Apr 2023 06:00 AM
Last Updated : 07 Apr 2023 06:00 AM
சென்னை: இந்தியாவின் முன்னணி காலணி பிராண்டுகளுள் ஒன்றான வாக்கரூ, ‘வாக் இந்தியா வாக்’ என்ற புதிய பரப்புரை திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்ற குறிக்கோளை நோக்கிய பயணத்தில் முதல் நடவடிக்கையாக நடைப்பயிற்சியை கருதும் வாக்கரூ, இந்தியாவெங்கிலும் உள்ள மக்களைத் தவறாமல் நடைப்பயிற்சியை செய்யுமாறு வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்தியபிராண்டான வாக்கரூ நடைப்பயிற்சி மீது வலுவான தாக்கம்ஏற்படுத்தும் விழிப்புணர்வைநாடெங்கிலும் உருவாக்குவதைநோக்கமாகக் கொண்டிருக்கிறது. நல்வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும் தினசரி நடைப்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் சிறப்பான பலன்கள் பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறி இதை வலியுறுத்துவதே இந்த பரப்புரைத் திட்டத்தின் இலக்காகும்.
இப்பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக, #வாக்இந்தியாவாக் என்ற ஒரு ஆர்வமூட்டும் சமூகஊடகப் போட்டியையும் வாக்கரூஅறிவித்திருக்கிறது. பங்கேற்பாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான நடைப்பயிற்சி அமைவிடத்தில் தாங்கள் நடைப்பயிற்சி செய்யும் ஒரு செல்ஃபி படத்தை எடுக்க வேண்டும்; அல்லது 10 கி.மீ. நடைப்பயிற்சி என்ற சவாலை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து அதுகுறித்த ஒரு நிழற்படத்தை எடுக்க வேண்டும். அதன்பிறகு ஒரு செல்ஃபியை / நிழற்படத்தை தங்களது சமூக ஊடக ஹேண்டில்களில் பதிவேற்றம் செய்து வாக்கரூ மற்றும் #வாக்இந்தியாவாக்–ஐ டேக் செய்து அனுப்ப வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT