Published : 05 Apr 2023 01:53 PM
Last Updated : 05 Apr 2023 01:53 PM

நங்கநல்லூர் கோயில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி 5 பேர் பலியானது எப்படி?- அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம்

அமைச்சர் தா.மே.அன்பரசன் பேட்டி

சென்னை: சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின்போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலில் ஒருவர் மட்டுமே ஆழமான பகுதிக்குள் தவறி விழுந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்துள்ளனர். இதில், ராகவன், லோகேஸ்வரன், பானேஷ், சூர்யா, ராகவன் உள்ளிட்ட 5 பேரும் நீரில் மூழ்கி 5 உயிரிழந்துள்ளனர். 5 பேரும் 20 முதல் 25 வயது வரை கொண்ட படித்த இளைஞர்கள்.

தகுந்த பாதுகாப்புடன் இந்த நிகழ்வை நடத்தி இருக்க வேண்டும்.தகுந்த பாதுகாப்பு இல்லாமல் நிகழ்வை நடத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான் சட்டமன்றத்தில் இருந்தபோது இந்தத் தகவல் வந்தது. உடனடியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். முதல்வர் நேரில் செல்லுங்கள் என்று கூறினார். முதல்வரின் சார்பில் 5 பேரின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில். நிகழ்வுக்கு முன்பாக காவல்துறைக்கு முறையாக தகவல் அளிக்கப்பட்டதா, இல்லையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்."இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x