Published : 05 Apr 2023 04:49 AM
Last Updated : 05 Apr 2023 04:49 AM
சென்னை: தமிழக மின்வாரியத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்கும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் சேவை கிடைக்க அவகாசம் நிர்ணயித்துள்ளது.
இதன்படி, புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். புதிய மின் இணைப்பு, தற்காலிக மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றச் சேவைகளுக்கு ஒரு நாள் தாமதத்துக்கு ரூ.100 வீதம் அதிகபட்சம் ரூ.1,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
மின்தடை ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்துக்குள் மின்சாரம் வழங்கவில்லை எனில், ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் ரூ.50 வீதம் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம், மின்னழுத்த புகாருக்கு ரூ.250 என ஒவ்வொரு சேவைக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இதுபோன்ற விதிகள் கடந்த 2004 செப்டம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்டன. தற்போது 19 ஆண்டுகள் ஆன நிலையில் பலமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம், இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படவில்லை. எனவே, மின்வாரியத்தின் சேவை தாமதத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT