Published : 05 Apr 2023 06:03 AM
Last Updated : 05 Apr 2023 06:03 AM

கீழடியில் நாளை முதல் 9-ம் கட்ட அகழாய்வு: முதல்வர் காணொலியில் தொடங்கிவைக்கிறார்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வுப் பணி 2015-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 8 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. மத்திய தொல்லியல் துறை 3 முறையும் தமிழக தொல்லியல் துறை 5 முறையும் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன.

அகழாய்வு மூலம் கிடைத்த பல ஆயிரம் தொல்பொருட்களைப் மக்கள் பார்வையிடும் வகையில் ரூ.18.46 கோடியில் கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் கட்டப்பட்டு அதை மார்ச் 5-ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், கீழடி 9-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் ஸ்டாலின் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் நடைபெற உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x