Published : 04 Apr 2023 11:37 AM
Last Updated : 04 Apr 2023 11:37 AM
சென்னை: தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. .
தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 3) உடன் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும், குழப்பமும் நிலவியது. கோடை வெயில் காரணமாக தேர்வை முன் கூட்டியே நடத்தி கோடை விடுமுறை விட வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
ஏப்ரல் 28ஆம் தேதியுடன் தேர்வுகளை முடித்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ள நிலையில் அந்தந்த கல்வி மாவட்ட நிர்வாகங்கள் உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்வுத் தேதிகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் திருவள்ளூர், திண்டுக்கல் என சில மாவட்டங்களில் ஏப்ரல் 11 தொடங்கி ஏப்ரல் 24 வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் ஏப்.21 தொடங்கி ஏப்.28ல் நடத்தி முடிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் மாவட்ட தேர்வு அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்.
இது மதுரை மாவட்டத்திற்கான தேர்வு அட்டவணை:
பாடம் | தேதி |
தமிழ் | ஏப்.21 |
ஆங்கிலம் | ஏப்.24 |
கணிதம் | ஏப்.25 |
அறிவியல் | ஏப்.26 |
சமூக அறிவியல் | ஏப்.28 |
விளையாட்டுக் கல்வி | ஏப்.27 |
தேர்வு நேரம்: தேர்வு நடைபெறும் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வ் தேதிகளில் மாற்றம் இருந்தாலும் தேர்வு நேரம் ஏதும் மாறுபடவில்லை. 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும். 7-ம் வகுப்பிற்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 8-ம் வகுப்பிற்கு காலை 9.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், 9-ம் வகுப்பிற்கு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT