Published : 04 Apr 2023 06:45 AM
Last Updated : 04 Apr 2023 06:45 AM
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை ஏப்.15-ம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீத ஊக்கத்தொகை பெறலாம்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சொத்துவரியானது, சொத்து உரிமையாளர்களால், அரையாண்டின் முதல் 15 தினங்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை, அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.
கடந்த நிதியாண்டின் 2 அரையாண்டுகளின் முதல் 15 நாட்களுக்குள், அதாவது 1-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 589 பேர், அக்டோபர் மாதத்தில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 127 பேர் சொத்து வரி செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுள்ளனர்.
சொத்து உரிமையாளர்கள், சொத்துவரியை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், சென்னை மாநகராட்சி அலுவலங்களில் அமைந்துள்ள அரசு இ-சேவை மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும்பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், நம்ம சென்னை மற்றும் பேடிஎம் செயலி, சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாகசொத்துவரி செலுத்தவும்வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை ஏப்.15-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையை பெற்றுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT