Published : 02 Apr 2023 05:52 AM
Last Updated : 02 Apr 2023 05:52 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5-வது சிப்காட் அமைக்கும் பணிக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறு, குறு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நேற்று 88-வது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற விவசாயிகள் பயிர் செடிகள், காய்கறிகள், ஏர் உழவு கலப்பை ஆகியவற்றுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT