Published : 02 Apr 2023 07:22 AM
Last Updated : 02 Apr 2023 07:22 AM
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மார்ச் மாதத்தில் 69 லட்சத்து 99,341 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69,282 பேர் பயணம் செய்தனர். பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, மார்ச் மாதத்தில் 6 லட்சத்து 30,059 பேர் அதிகமாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மார்ச் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 21 லட்சத்து 61,453 பேரும், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப்பயன்படுத்தி 44 லட்சத்து 76,793பேரும் பயணம் செய்துள்ளனர். டோக்கன்களை பயன்படுத்தி 3 லட்சத்து 55,702 பேரும், குழுபயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,393 பேரும் பயணம் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment