Published : 01 Apr 2023 03:10 PM
Last Updated : 01 Apr 2023 03:10 PM
சென்னை: கிழக்கு - மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், கிழக்கு - மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
அதில், "2022 - 2023-ம் ஆண்டில் பெரிய மேற்கத்திய சாலையில் நெல்சன் மாணிக்கம் சந்திப்பு மற்றும் உள் வட்ட சாலையில் 2 இடங்களில் நடை மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு ரூ.30 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு ஆய்வு மற்றும் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகப்பேரில் டிஏவி பள்ளி மற்றும் வேலம்மாள் பள்ளி, கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT