Published : 30 Mar 2023 04:52 PM Last Updated : 30 Mar 2023 04:52 PM
ரூ.420 கோடியில் 24x7 குடிநீர் திட்டம், 25 நவீன தகன மேடைகள்: தமிழக நகராட்சி நிர்வாகத் துறையின் புதிய அறிவிப்புகள்
புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் கே.என்.நேரு
சென்னை: 9 மாநகராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளில் ரூ.420 கோடியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 30) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:
9 மாநகராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளில் ரூ.420 கோடியில் 24x7 குடிநீர் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட 6 மாநகராட்சிகளில் ரூ.22.50 கோடி மதிப்பீட்டில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை செயலாக்கும் ஆலைகள் அமைக்கப்படும்.
3 மாநகராட்சிகள் மற்றும் 9 நகராட்சிகளில் ரூ.174 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளும் ரூ.52.50 கோடியில் 25 புதிய நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.
ரூ.150 கோடியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் (ம) பழைய பள்ளிக் கட்டடங்கள் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்படும்.
மாநகராட்சிகள், நகராட்சிகளில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு பயன்படும் வகையில் 100 பூங்காக்கள் மற்றும் பசுமை இயற்கை வளங்களை மேம்படுத்த ரூ.60.90 கோடி ஒதுக்கீடு.
மாநகராட்சிகள், நகராட்சிகளில் 400 கி.மீ நீளமுள்ள மண்சாலைகளை தார்சாலை, கான்கிரீட் சாலை அல்லது பேவர் பிளாக் சாலைகளாக தரம் உயர்த்த ரூ.288 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு.
ரூ.345 கோடி மதிப்பீட்டில் 20 பேரூராட்சிகளில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
10 பேரூராட்சிகளில் ரூ. 25 கோடியில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் 10 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
நிலத்தடி நீரை பாதுகாக்கும் வண்ணம், முதற்கட்டமாக ரூ.50 கோடியில் 20 பேரூராட்சிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படும்.
WRITE A COMMENT
Be the first person to comment