Published : 29 Mar 2023 05:49 PM Last Updated : 29 Mar 2023 05:49 PM
ரூ.44 கோடியில் சென்னை குடிநீர் பணிகள், 8 மாவட்டங்களில் புதிய தடுப்பணைகள்: நீர்வளத் துறையின் 12 அறிவிப்புகள்
சென்னை: சென்னை மாநகராட்சி குடிநீர் தேவைக்கு ரூ.44 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார், தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 29) நீர்வளத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிவிப்புகளின் விவரம்:
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.88 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சி குடிநீர் தேவைக்கு ரூ.44 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
புனரமைப்பு மற்றும் 2 வெள்ளத் தணிப்புப் பணிகள் ரூ.106 கோடியில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும்.
ரூ.58.45 கோடியில் புனரமைப்பு மற்றும் 7 வெள்ளத்தடுப்பு பணிகள் கடலூர், திருச்சி, மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும்.
17 அணைகளில் கதவுகளை புதுப்பித்தல் மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு ரூ.34 கோடி 72 லட்சம் ஒதுக்கீடு.
ரூ. 13 கோடி மதிப்பீட்டில் 7 மாவட்டங்களில் புதிய பாசன திட்டங்கள் செயல்படுத்த ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
ரூ.49.10 கோடியில் கோயம்புத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஆறுகள், ஓடைகளின் குறுக்கே பாலங்கள், சாலைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ரூ.12.79 கோடியில் புதிய கால்வாய்கள் அமைக்கப்படும்.
ரூ.285.07 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் ஏரிகளின் வெள்ளக்கதவுகள் ரூ.32 கோடி செலவில் தானியங்கி மயமாக்கப்படும்.
8 மாவட்டங்களில் ரூ. 70.75 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும்.
WRITE A COMMENT