Published : 28 Mar 2023 12:51 PM
Last Updated : 28 Mar 2023 12:51 PM
சென்னை: சட்டம் ஒழுங்கு அறவே இல்லாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"அஇஅதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி கழக செயலாளர், இளங்கோ சமுக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்,பிரதான எதிர்க்கட்சியில் முக்கிய பங்காற்றக் கூடிய நிர்வாகிக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை நம் மாநிலத்தில் நிலவவுது பெரும் கண்டனத்துக்குரியது.
சட்டம் ஒழுங்கு அறவே இல்லாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு இருப்பது வெட்ககேடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த நாசகார செயலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
அஇஅதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி கழக செயலாளர்,திரு.இளங்கோ அவர்கள் சமுக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்,பிரதான எதிர்கட்சியில் முக்கிய பங்காற்ற கூடிய நிர்வாகிக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை நம் மாநிலத்தில் நிலவவுது பெரும் கண்டனத்துக்குரியது,1/2 pic.twitter.com/WX6r1zx9Ha
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 28, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT