Published : 04 Sep 2017 07:40 AM
Last Updated : 04 Sep 2017 07:40 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் ஓணம் சீஸன் காலத்தில் இங்கு விற்பனை களைகட்டும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கான பூக்கள் விற்பனை இச்சந்தையில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் கேரளாவில் இன்று ஓணம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தோவாளை மலர் சந்தையில் வியாபாரம் களை கட்டியது. சந்தை வளாகம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளிலும் விற்பனைக்காக பூக்கள் குவிக்கப்பட்டிருந்தன.
கேரளாவில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்திருந்து பூக்களைக் கொள்முதல் செய்தனர். ஓசூர் கிரேந்தி பூக்கள் மட்டும் 200 டன்னுக்கு மேல் விற்பனை ஆனது. நேற்று காலை வரை விடிய விடிய ரூ.5 கோடிக்கு மேல் மலர்கள் விற்பனையானது.
விலை ஏற்றம்
ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களாக இருந்ததால் பூக்கள் விலை ஏற்றம் அடைந்தது. மல்லிகை கிலோ ரூ.1000, பிச்சி 650, அரளி 120, கிரேந்தி 70, ஓசூர் கிரேந்தி 60, சம்பங்கி 100, ரோஜா 170, வாடாமல்லி 140, கோழிகொண்டை 100, மரிக்கொழுந்து 100, செவ்வந்தி ரூ.150-க்கு விற்பனையானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT