Published : 28 Mar 2023 06:06 AM
Last Updated : 28 Mar 2023 06:06 AM

விருதுநகர் - செங்கோட்டை இடையே நாளை சோதனை ஓட்டம்

விருதுநகர் - செங்கோட்டை இடையே அகல ரயில் பாதையில் நாளை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதையொட்டி ராஜபாளையம் ரயில் நிலை யத்தில் மின்சார இன்ஜின் வைத்து நடந்து வரும் இறுதிக்கட்ட ஆய்வுப்பணி.

சிவகாசி: விருதுநகர் - தென்காசி இடையே அகல ரயில் பாதை மின்மயமாக்கல் பணி நிறைவடைந்த நிலையில் நாளை (மார்ச் 29) மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறும் என ரயில்வே கட்டமைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகர் - தென்காசி, திருநெல்வேலி - தென்காசி, தென்காசி - செங்கோட்டை இடையிலான அகல ரயில் பாதை மின்மயமாக்கப்படும் என 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திருநெல்வேலி - தென்காசி இடையே மின்மயமாக்கல் பணி முடிந்து, கடந்த 13-ம் தேதி மின்சார இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. விருதுநகர் - தென்காசி, தென்காசி - செங்கோட்டை இடையே கடந்தஓராண்டாக நடந்த மின்மயமாக்கல் பணி தற்போது 100 சதவீதம் நிறைவடைந்து விட்டது.

விருதுநகர் - செங்கோட்டை அகல ரயில் பாதையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே கிராஸிங்குகளில் வாகனங்கள் தண்டவாளத்தை கடக்கும்போது மின் கம்பிகளில் உரசாமல் இருக்கஉயர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விருதுநகர் - செங்கோட்டை இடையே நாளை (மார்ச் 29) மின்சார இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறும் என ரயில்வே கட்டமைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ஏப்ரல் 8-ம் தேதி செங்கோட்டை - தாம்பரம் இடையே திருநெல்வேலி வழியாக வாரம் 3 நாட்கள் இயங்கும் சிறப்பு ரயிலை பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்குள் அனைத்து மின்மயமாக்கல் பணிகளையும் முடித்து நாளை சோதனை ஓட் டம் நடத்துவதற்கான பணிகள் நடக்கின்றன என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x