Published : 07 Jul 2014 09:00 AM
Last Updated : 07 Jul 2014 09:00 AM
சென்னை ஐஐடியில் புதிய கட்டிடங்கள் கட்டினால் அது, கிண்டி சிறுவர் பூங்காவுக்கு ஆபத்தாக அமையும் என்று கிண்டி தேசிய பூங்கா பாது காப்பு பிரச்சார அமைப்பு கூறி யுள்ளது.
இதை வலியுறுத்தி, பெசன்ட் நகர் கடற்கரையில் மனித சங்கிலியை அந்த அமைப்பு நடத்தியது.
இதுகுறித்து பிரச்சார அமைப்பைச் சேர்ந்த நித்யானந்த ஜெயராமன் கூறியதாவது:
சென்னை ஐஐடியில் 2001 முதல் 2012 வரை 52 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் அழிக் கப்பட்டன. தற்போது மேலும் 58 ஏக்கரில் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இது ஐஐடி அருகில் உள்ள கிண்டி தேசிய சிறுவர் பூங்காவுக்கு ஆபத்தாக அமையும்.
வன பாதுகாப்புச் சட்டத் தின்படி, தேசிய பூங்காக்களின் அருகில் குறிப்பிட்ட அளவு இடத்தை சுற்றுச்சூழல் பாது காப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும்.
புதிய கட்டிடம் கூடாது
அந்தப் பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதோ, அதிக அளவில் மனித நடமாட் டம் இருப்பதோ கூடாது. எனவே, கிண்டி தேசிய பூங்கா அருகில் இருக்கும் ஐஐடியில் புதிதாக கட்டிடங்கள் கட்டக் கூடாது.
கிண்டி தேசியப் பூங்கா மட்டுமல்லாமல், அனைத்து பூங்காக்களின் அருகிலும் குறிப்பிட்ட அளவு பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பகுதியாக அறிவிப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
அதற்கான எல்லை கள் நிர்ணயிக்கப்படும் வரை, பூங்காக்களுக்கு 10 கி.மீ. சுற் றளவில் இருக்கும் பகுதிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக கருத வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT