Published : 26 Mar 2023 04:15 AM
Last Updated : 26 Mar 2023 04:15 AM
ராமேசுவரம்: இந்திய - இலங்கை நாட்டு மக்களின் சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக திகழும் கச்சத் தீவில், இலங்கை கடற்படையினர் 2 புத்தர் சிலைகளை திடீரென நிறுவி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 8.6.2016-ம் ஆண்டில் இலங்கை அரசு சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் கச்சத்தீவில் புதிய அந்தோணியார் தேவாலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப் பட்டது. இதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரி வித்ததுடன், தமிழக மீனவர்களின் பங்களிப்புடன் இந்தியாவும், இலங்கையும் கூட்டாகச் சேர்ந்து தேவாலயத்தை கட்டுவதற்கு, இலங்கை அரசை சம்மதிக்கச் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
ஆனால், தமிழக மீனவர்களின் பங்களிப்பு இல்லாமலேயே கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்டப்பட்டு, 23.12.2016-ல் திறக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, 2017-ல் இருந்து இந்த ஆலயத்தில்தான் அந்தோணியார் திருவிழாவும் நடக்கிறது. இந்நிலை யில், இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் பேசும்போது, ‘இந்தியா, இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கும் போது, அந் தோணியார் ஆலயத்துடனேயே வழங்கியது.
இத்தனை ஆண்டு காலமாக கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் மட்டுமே இருந்து வந்தது. ஆனால், தற்போது இலங்கை கடற்படையினரால் கச்சத்தீவில் மிகப்பெரிய 2 புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனை உடனடியாக அகற்ற வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இது குறித்து நெடுந்தீவு பங்குதந்தை வசந்தன் செய்தியாளர்களிடம் கூறியது: கச்சத்தீவில் உள்ள கடற்படை முகாமுக்கு எதிரே, 5 அடி மற்றும் 3 அடி உயர 2 புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதை பார்த்தேன். இதை, கச்சத்தீவு விழாவுக்கு வந்தவர்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, சுற்றி பனை ஓலைகளை கட்டி மறைத் துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அனைத்து மதத்தினரும் கச்சத்தீவில் தங் களது மத சம்பந்தமான ஆலயங்களை நிறுவி வழிபடத் தொடங்கினால், மத நல்லிணக்கம் பாதிக்கப்படுவதுடன், மத மோதல் களும் ஏற்படும். எனவே, புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் கூறுகையில், கச்சத்தீவு திரு விழாவில் இலங்கை, இந்திய நாட்டு பக்தர்கள் மட்டுமில்லாமல், சிங்கள பக்தர்களும் வழிபட்டு வருகின்றனர். அங்கு புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, 2 நாட்டு மக் களிடையேயான சுமூக உறவைப் பாதிக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT