Published : 25 Mar 2023 04:24 AM
Last Updated : 25 Mar 2023 04:24 AM
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் (84) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமக தலைவர் ரா.சரத்குமார், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT