Published : 25 Mar 2023 06:22 AM
Last Updated : 25 Mar 2023 06:22 AM

ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதி கட்டமைப்பு மாநாடு தொடக்கம்: பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதி கட்டமைப்பு பணிக்குழுவின் 2-நாள் மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் கூட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சென்னை: ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதிகட்டமைப்பு பணிக் குழுவின் இரண்டு நாள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

தற்போது ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது. இதையொட்டி, கல்வி, நிதி, எரிசக்தி, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக, ஜி-20நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கருத்தரங்குகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் கடந்த ஜனவரி 31, பிப். 1-ம் தேதிகளில் கல்வி தொடர்பான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், கூட்டமைப்பின் 2-வது நிதி கட்டமைப்பு பணிக் குழுவின் 2 நாள் மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட உறுப்பு நாடுகள் மற்றும் நட்புநாடுகளைச் சேர்ந்த 80-க்கும்மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன், இங்கிலாந்து அரசின் நிதித் துறை தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமை வகித்தனர்.

வெவ்வேறு அமர்வுகளாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், உணவு, எரிசக்தி, பருவநிலை மாற்றம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற ஐக்கிய நாடுகள் சபை வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுப் பிரதிநிதி ஆண்ட்ருஸ் மைக்கேல் ராண்டன் கூறும்போது, "இந்த மாநாட்டின் முதல் அமர்வில் பொதுவான விஷயங்கள் குறித்து விவாதித்தோம்.

அடுத்த அமர்வில், பணவீக்கம் மற்றும் இன்றைய உலகளாவிய பொருளாதார நிலை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க உள்ளோம்" என்றார்.

அமைப்பின் பிரதிநிதி அலெஜான்ட்ரோ பெட்ரிகோ இசுரியெட்டா கனோவா கூறும்போது, "உலகப் பொருளாதாரம், அரசியல் சூழல், மத்திய வங்கிகளின் வட்டிவிகிதங்கள், பொருளாதார ஊக்கநடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். தொடர்ந்து, ஜி-20 நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரப் பரிமாற்றம் மற்றும் உற்பத்திப் பற்றாக்குறை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது" என்றார்.

பிரான்ஸ் நாட்டுப் பிரதிநிதி ஜுலியன் ஆர்தர் கூறும்போது, "உலக வங்கி, ஆசிய வங்கி உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிராந்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள், பொருளாதார ஊக்க நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தோம்" என்றார். ரஷ்ய நாட்டுப் பிரதிநிதி டிட்டியனா லுதினா தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இம்மாநாடு இன்று (மார்ச் 25) நிறைவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x