Published : 24 Mar 2023 03:40 PM
Last Updated : 24 Mar 2023 03:40 PM
சென்னை: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளதாக, தமிழக அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராகுல் தகுதி நீக்கம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும்,அவரை எம்பி பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது" என்று அதில் கூறியுள்ளார்.
தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் @RahulGandhi அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும்,அவரை MP பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது
— Udhay (@Udhaystalin) March 24, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 10 Comments )
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும், சட்டமன்றம் அல்லது பாராளுமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்வதற்கு, 2013 ல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுதானே?
0
2
Reply
அது சரிதான். ஆனால் ஒரு அவதூறு வழக்குக்கு இரண்டு வருட தண்டனை என்பது எப்போது வந்தது?
1
0
ஆனால், ஒரு சாதாரண அவதூறு வழக்குக்கு இரண்டாண்டுகள் சரியாக தண்டனை கொடுத்தால், காரியமாகும் என்று கணித்தது யாரோ?
0
0
பத்திரமான தேர்தல் தொகுதிக்காக கால்நடை யாத்ரி செய்தவர் ராகுல்.ராகுலை ஒருபொருட்டாகவே பிஜேபி தலைமை மதித்து கிடையாது. சோனியா ஒருவருக்கு மட்டுமே பிஜேபி மரியாதை தருகிறது.
1
5
Reply
பொருட்டாக மதிக்காமலா இந்த பயம்? அதுசரி சோனியா வாடகை கேட்டுவிட்டார், பதில் சொல்லவே இல்லையாம்.
3
1