Published : 23 Mar 2023 06:00 AM
Last Updated : 23 Mar 2023 06:00 AM

வருத்தம் தரும் சம்பவங்களில் திமுக நிர்வாகிகள் எவரும் ஈடுபடக் கூடாது: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: திமுக நிர்வாகிகள் எவரும் வருத்தம்தரும் சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டா லின் அறிவுறுத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடர்பாக, திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றிக்கு பாடுபட்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தலைமையின் அறிவுறுத்தல்களை மீறி பல வருத்தம் தரும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது. நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாமல் மாவட்ட செயலாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் பிரமாண்டமாகக் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகளை வகுக்க வேண் டும். மாவட்டச் செயலாளர்கள், அந்தந்த மாவட்டப் பகுதிகளில்பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். ஆட்சியின்சாதனைகள், பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பாக தெருமுனை பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம் மூலம்மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.அத்துடன் உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்த வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல்: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், தேர்தல் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். அரசு திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க தேவையானவற்றை செய்ய வேண்டும். தேர்தலை பொறுத்தவரை, பூத் கமிட்டி உறுப்பினர்களைத் தேர்வு செய்து வலுப்படுத்த வேண்டும்.

தேர்தலுக்கு சட்டப்பேரவை தொகுதிவாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதில் சிறப்பாகப் பணியாற்றும் மாவட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். அதேநேரம் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்டச் செயலாளர் கூட்டத்தைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பூத் கமிட்டிஉறுப்பினர்கள் தொடர்பான பட்டியல் மாவட்ட செயலாளர்களிடம் வழங்கப்பட்டு, அதனை உறுதி செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x