Published : 22 Mar 2023 07:19 AM
Last Updated : 22 Mar 2023 07:19 AM
சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நிதி ஆயோக் குழுவினர் சந்தித்து, நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, நிதிஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் சுமன் குமார் பெர்ரி மற்றும் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவினர் சந்தித்தனர். அந்த அமைப்பின் முக்கிய முயற்சிகளான நீடித்த வளர்ச்சி இலக்குகள், முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டம் ஆகியவை குறித்து கலந்தாலோசித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், நிதித் துறை செயலர் நா.முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சிறப்பு செயலர் த.சு.ராஜ்சேகர், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா, நிதி ஆயோக் ஆலோசகர் பார்த்தசாரதி ரெட்டி, துணைத்தலைவரின் தனிச்செயலர் ஏ.முத்துக்குமார் உள் ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT