Published : 21 Mar 2023 11:56 AM
Last Updated : 21 Mar 2023 11:56 AM

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 | வெங்காயம், தக்காளி சீராக கிடைக்க ரூ.48 கோடியில் திட்டம்

தாக்காளி மற்றும் வெங்காயம் | கோப்புப் படம்

சென்னை: தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் வெங்காயம் சீராக கிடைத்திட ரூ. 29 கோடியிலும், தக்காளி உற்பத்தியை அதிகரித்திட ரூ. 19 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும்.

இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்:

நீலமலையில் ரூ.50 கோடி செலவில் அங்கக வேளாண்மை ஊக்குவிப்பு மையம் அமைக்கப்படும்.

கேழ்வரகு, கம்பு ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்வது உறுதி செய்யப்படும்.

வண்டல் மண்ணை விளைநிலங்களில் பயன்படுத்துவதற்கு அரசு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளும்.

சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கழிவிலிருந்து, மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

தேனி, திண்டுக்கல், கரூர், உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கி, முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1,000 ஹெக்டேரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு.

அரியலூர், கடலூர், திண்டுக்கல், உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் பலா சாகுபடி மேற்கொள்ளப்படும்

வெங்காயம் சீராக கிடைத்திட ரூ. 29 கோடியில் திட்டம்.

தக்காளி உற்பத்தியை அதிகரித்திட ரூ. 19 கோடியில் திட்டம்.

ரூ.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் மிளகாய் மண்டலம் செயல்படுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x