Published : 21 Mar 2023 11:37 AM
Last Updated : 21 Mar 2023 11:37 AM
சென்னை: பருத்தி உற்பத்தியை உயர்த்த ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும்.
இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்:
> பருத்தி உற்பத்தியை உயர்த்தும் வகையில் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
> அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.5 லட்ச பணமும், பாராட்டு பத்திரமும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
> தரிசு நிலங்களை கண்டறிந்து மா, பலா, கொய்யா நட நடவடிக்கை எடுக்கப்படும்
> வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு
> விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க ஆண்டு கட்டணமாக ரூ. 10,000 மானியத்தொகை அறிவிக்கப்படும். இதற்காக ரூ.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும்
> விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ்ஆப் குழு.
> வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT