Published : 03 Jul 2014 09:00 AM
Last Updated : 03 Jul 2014 09:00 AM

மெரினாவை அழகுபடுத்தும் பணி மீனவர்களின் எதிர்ப்பால் நிறுத்தம்

மெரினா கடற்கரையை அழகுபடுத் தும் பணி அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களின் எதிர்ப்பால் தற்காலிக மாக நிறுத்தப்பட்டது.

மெரினா கடற்கரையை அழகு படுத்தும் பணிகளை சென்னை மாநக ராட்சி மேற்கொண்டு வருகிறது. கலங் கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை இப்பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில் இது சட்டத் திற்கு புறம்பானது என்று கூறி மீனவர் களும், சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நொச்சிக்குப்பத்தில் வசிக்கும் தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தின் தலைவர் கே.பாரதி இதுகுறித்து கூறியதாவது:

கடற்கரையில் எங்கள் படகுகளை நிறுத்தவும், வலைகளை உலர்த்தவும் தான் இடம் இருக்கிறது. அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் அந்த இடத்தை எங்களிடமிருந்து பறித்துக் கொண்டால், நாங்கள் எங்கே போவது? இந்த இடம் பாரம்பரியமாக எங்களுக்கு சொந்தமான இடம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாநகராட்சி பணிகளை மேற்கொள்ளும் இடம் உயர் அலை கோட்டுக்கும் தாழ் அலை கோட்டுக்கும் இடையேயான பகுதி என்றும் அதில் எந்தவித பணிகளை மேற்கொள்வதும் சட்டப்படி குற்றம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் நித்தி யானந்த ஜெயராமன் கூறியதாவது:

இந்தப் பகுதியை துறைமுகம் கட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்த முடியும். அது தவிர எந்தவித பணி களை செய்வதற்கும் அனுமதி கிடை யாது. இப்பகுதியில் உள்ள மீனவர் களுக்கு ஒழுங்கான கழிப்பறை களைக்கூட கட்டித் தராத மாநகராட்சி, கடற்கரையை அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ஊருர் குப்பத்தில் வசிக்கும் மீனவர் சமுதாயத்தை சேர்ந்த மற்றொரு சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில், “இந்த திட்டத்தைப் பற்றி மீனவ குடும்பங் களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக் கப்படவில்லை. தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் கீழ் இதுகுறித்த தகவல்களை பெற விண்ணப்பித் துள்ளோம். இந்த இடம் கடல் ஆமை கள் முட்டையிடும் பகுதியாகவும் உள்ளது. எனவே இது குறித்து, கடலோர பகுதி மேலாண்மை ஆணை யத்திடமும், மாநகரட்சி ஆணையரி டமும் புகார் அளித்துள்ளோம். அடுத்த கட்டமாக மாநகராட்சி மீது வழக்கு தொடுக்கவுள்ளேன்,” என்றார்.

இந்நிலையில் எதிர்ப்புகளைத் தொடர்ந்து மெரினாவை அழகு படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x