Published : 20 Mar 2023 06:09 AM
Last Updated : 20 Mar 2023 06:09 AM

ஆம்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டிட கான்கிரீட் சிலாப்புகள் சேதம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆம்பூர் பேருந்து நிலைய கான்கிரீட் சிலாப்பு பெயர்ந்து விழுந்துள்ளன.

ஆம்பூர்: ஆம்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் ஆபத்தான முறை யில் பெயந்து விழும் நிலையில் உள்ள கான்கிரீட் சிலாப்புகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தை சுற்றிலும் கடைகள் அமைக்கப்பட்டு மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் முறையான பராமரிப்பு இல்லாததால் பேருந்து நிலைய கட்டிடங்கள் ஆங்காங்கே சிதிலமடைந்து அங்குள்ள கான்கிரீட் சிலாப்புகள் ஒரு சில பகுதியில் பெயர்ந்து விழுந்தும், பிற இடங்களில் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் காணப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘ஆம்பூர் பேருந்து நிலையம் போதிய பராமரிப்பு இல்லாததால் ஒரு சில கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது. மற்ற கடைகள் மூடியே கிடக்கிறது. பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பினால் செய்யப்பட்ட நாற்காலிகள் சேத மடைந்து காணப்படுகிறது.

பேருந்து நிலையத்தின் மேல் தளத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் குட்டைப்போல் தேங்கு கிறது. தேங்கிய தண்ணீரை நகராட்சி நிர்வாகம் அகற்றாததால் தண்ணீர் வெளியேற முடியாமல் நீண்ட காலமாக மேல் தளத்திலேயே தேங்கி, பாசிப்படிந்து துர்நாற்றம் வீசுகிறது.

நீண்ட காலமாக தண்ணீர் தேங்கு வதால் கட்டிடத்தின் உறுதித்தன்மை படிப்படியாக ஆட்டம் கண்டு வருகிறது. கான்கிரீட் சிலாப்புகள் பெயர்ந்து அதில் உள்ள இரும்புகள் வெளியே தெரிகின்றன. பேருந்து வளா கத்தின் ஒரு பகுதியில் உள்ள கான்கிரீட் சிலாப்புகள் எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்து விழும் நிலை உள்ளது.

இதன் கீழே பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை நகராட்சி அதிகாரிகள் உணரவில்லை. நேற்று முன்தினம் இரவு திடீரென கான்கிரீட் சிலாப்பு துண்டுகள் பொல பொலவென பெயர்ந்து விழுந்தன. இதைக் கண்டதும் அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். ஆம்பூர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரித்து, பெயர்ந்து விழுந்த கான்கிரீட் சிலாப்புகளை சரி செய்து, பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், ஏடிஎம் மையம், உயர்கோபுர மின் விளக்குகள், காவல் துறை பாதுகாப்பு, பயணிகள் அமர தரமான இருக்கை வசதிகளை ஏற் படுத்தித்தர வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து இந்து தமிழ் திசை செய்தியாளரிடம், ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா கூறியதாவது, ‘‘ இது தொடர்பான தகவல் கிடைத்தது. நகராட்சி பொறியாளருடன் நேரில் சென்று பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து, கட்டிடத்தை சீரமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

- ந.சரவணன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x