Published : 18 Mar 2023 11:29 AM
Last Updated : 18 Mar 2023 11:29 AM

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் இபிஎஸ்

வேட்புமனு தாக்கல் செய்த இபிஎஸ்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை, அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான நத்தம் விசுவநாதன், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் நேற்று (மார்ச் 17) வெளியிட்டனர். அதில், அதிமுக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு-2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு "கட்சியின் பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்ற விதிமுறைக்கு ஏற்ப கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 18) காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாளை (மார்ச் 19) பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 21ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். மார்ச் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 27 வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x