Published : 16 Mar 2023 03:25 PM
Last Updated : 16 Mar 2023 03:25 PM
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்றுவருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 20 தேதி முடிவடைய உள்ளது. இது முடிந்த பின்னர் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறறும். இதன்படி ஏப்ரல் 24 முதல் இந்தத் தேர்வுகள் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 9-ம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ஏப்ரல் 17-ம் தேதி தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், "1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியிலேயே தேர்வுகள் நடைபெறும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT