Published : 15 Mar 2023 08:01 PM
Last Updated : 15 Mar 2023 08:01 PM
மதுரை: கடன் வழங்குவதில் வங்கிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வங்கி கடனுக்காக வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை கோரியும், கடனைத் திரும்ப செலுத்த போதிய கால அவகாசம் வழங்கக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “வங்கிகள் தற்போது கடனை திரும்ப செலுத்தும் வாடிக்கையாளர்கள் திரும்ப கடன் கேட்டால் உடனடியாக கொடுப்பதில்லை. ஆனால், மோசடி செய்பவர்களுக்கு கடன் கொடுக்கிறார்கள். இந்த மோசடி நபர்களுடன் சில வங்கி மேலாளர்கள் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர். வங்கிகள் நியாயமாக செயல்படுவதில்லை.
தனி நபர்கள் மொத்த கடன் ரூ.2 கோடிக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் குறைத்து செலுத்த முன்வந்தால் வங்கி மேலாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை. அதேநேரம் பெரு நிறுவனங்கள் கடன் தொகையில் பாதியை கட்டுவதற்கு முன்வந்தால் வங்கிகள் உடனடியாக ஏற்றுக்கொள்கின்றன. வங்கிகளில் பெரு நிறுவனங்களுக்கு தனி சட்டம் உள்ளதா? பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டம் கொண்டு வருவதற்காகவே சிலர் உள்ளனர்” என கருத்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT