Published : 15 Mar 2023 07:03 AM
Last Updated : 15 Mar 2023 07:03 AM
சென்னை: தமிழகத்தில் 3 நகரங்களில் நேற்றுவெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. தமிழகத்தில் பல இடங்களில் மார்ச் முதல் வாரத்தில் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த வெப்பநிலை தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 3 நகரங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய 3 நகரங்களில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கரூர்பரமத்தியில் 99.5 பாரன்ஹீட் டிகிரி பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 90 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT