Published : 13 Mar 2023 07:49 PM
Last Updated : 13 Mar 2023 07:49 PM
சென்னை: "நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு ஆண்டும் 22.5% நிதியை எஸ்.சி; எஸ்.டி மக்கள் வசிக்கும் பகுதிகளின் மேம்பாட்டுக்காக செலவிடவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என மாற்றப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த அநீதியை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு ஆண்டும் 22.5% நிதியைஎஸ்.சி; எஸ்.டி மக்கள் வசிக்கும் பகுதிகளின் மேம்பாட்டுக்காக செலவிடவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. தற்போது அதனைக் கட்டாயம் இல்லை என மாற்றியுள்ளனர். மோடி அரசின் இந்த அநீதியை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உள்ளூர் மேம்பாட்டுத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 15 சதவீதத்தை பட்டியலினத்தவர் மேம்பாட்டிற்கும், 7.5 சதவீதத்தை பழங்குடியினர் மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.
அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.5 கோடியில், ரூ.75 லட்சத்தை பட்டியலின மக்களுக்காகவும், ரூ.37.5 லட்சத்தை பழங்குடியினருக்காகவும் கட்டாயம் செலவிட வேண்டும் என்ற விதிமுறை குறிப்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து பகிர்ந்துள்ளார்.
நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு ஆண்டும் 22.5% நிதியை
எஸ்.சி; எஸ்.டி மக்கள்
வசிக்கும் பகுதிகளின் மேம்பாட்டுக்காக செலவிடவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. தற்போது அதனைக் கட்டாயம் இல்லை என மாற்றியுள்ளனர். மோடி அரசின் இந்த அநீதியை வன்மையாகக் கண்டிக்கிறோம். #MPLAD pic.twitter.com/bXuEQIX0o9— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 12, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT