Published : 02 Apr 2014 07:45 PM
Last Updated : 02 Apr 2014 07:45 PM
நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.75 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுவைத் தாக்கல் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, "ஜி அலைக்கற்றைப் பற்றி எல்லாம் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தில் பேசி வருகிறார். நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன்பு 102 பக்க விளக்க அறிக்கையை அளித்தேன். அதற்கு அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நஷ்டம் ஏற்படவில்லை. இதில், நேருக்கு நேர் ஜெயலலிதா விவாதிக்கத் தயாரா என சவால் விடுகிறேன்" என்றார்.
தனது பெயரில் உள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.1.77 கோடி என ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார். 2009-ல் வேட்புமனு தாக்கல் செய்தபோது, இதன் மதிப்பு ரூ.70 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு விவரம்:
ஆ.ராசா பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.1,45,90,709
ஆ.ராசா பெயரில் அசையா சொத்துக்கள் - ரூ.14,87, 419
ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.93,93,597
ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையா சொத்துக்கள் = ரூ.14,12,975
மகள் பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.18,15,400.
பரம்பரை சொத்துக்களில் அசையும் சொத்து - ரூ.41,03,540
பரம்பரை சொத்துக்களில் அசையா சொத்துக்கள் - ரூ.14,53,875
மொத்த சொத்து மதிப்பு - ரூ.3,75,42,880
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT