Last Updated : 12 Mar, 2023 06:34 PM

 

Published : 12 Mar 2023 06:34 PM
Last Updated : 12 Mar 2023 06:34 PM

சதுரகிரியில் காட்டாறுகளின் குறுக்கே இரும்பு பாலங்கள்: அடுத்த மாதம் பணிகள் தொடக்கம்

விருதுநகர்: பக்தர்கள் வசதிக்காக, சதுரகிரிக்குச் செல்லும் பாதையில் உள்ள காட்டாறுகளின் குறுக்கே 7 இடங்களில் இரும்புப் பாலங்களும், அன்னதானக் கூடமும் ரூ.4.95 கோடியில் கட்டப்பட உள்ளன.

விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி. இங்கு சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில் களுக்கு நாள்தோறும் பக்தர்கள் சென்றுவர முன்பு அனுமதி அளிக் கப்பட்டது. ஆனால், கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 9 பக்தர்கள் உயிரிழந்தனர்.

அதன் பின்னர், சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டன. தற்போது, அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களை ஒட்டிய 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சதுரகிரிக்குச் செல்ல அனுமதிக்கப் படுகின்றனர். அந்த நேரத்திலும் திடீர் மழை, பருவநிலை மாற்றம் மற்றும் காட் டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இதனால், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள காட்டா றுகளையும், ஓடைகளையும் பொதுமக்கள் பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில், பாலங்கள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.

இதனடிப்படையில், மலைப் பாதையில் 7 இடங்களில் காட்டாறுகளின் குறுக்கே இரும்புப் பாலமும், சதுரகிரி கோயிலில் அன்னதானக் கூடமும் அமைக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, மலைப் பாதையில் உள்ள மாங்கனி ஓடையில் ரூ.65.46 லட்சத்திலும், எலும்பு ஓடைப் பகுதியில் ரூ.54.93 லட்சம் மதிப்பிலும், சங்கிலிப்பாறை ஓடை பகுதியில் ரூ.79.57 லட்சம் மதிப்பிலும், பிளாவடிக் கருப்பு கோயில் பகுதியில் ரூ.73.60 லட்சம் மதிப்பிலும், வெள்ளைப்பாறை ஓடைப் பகுதியில் ரூ.60.63 லட்சம் மதிப்பிலும்,

சுந்தர மகாலிங்கம் கோயில் சந்நிதி நுழைவுவாயில் முன்புள்ள ஓடைப் பகுதியில் ரூ.43.78 லட்சம் மதிப்பிலும் மற்றும் முன்மண்டபம் அருகே உள்ள ஓடைப் பகுதியில் ரூ.64.86 லட்சம் மதிப்பிலும் இரும்புப் பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்துடன், கோயில் பகுதியில் ரூ.52.51 லட்சத்தில் புதிதாக அன்னதானக் கூடமும் என மொத்தம் ரூ.4,95,36,902 மதிப்பில் கட்டுமானங்கள் நடை பெற உள்ளன.

மேலும், இப்பணிகளை அடுத்த மாதம் தொடங்கவும், ஓராண்டுக் குள் கட்டுமானப் பணிகளை முடிக்கவும் கோயில் நிர்வாகம் திட்ட மிட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பணிகளை விரைந்து முடிப்பதுடன், சதுரகிரி மலைக்கு நாள்தோறும் பக்தர்கள் சென்றுவர அனுமதியளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x