Published : 10 Mar 2023 04:32 AM
Last Updated : 10 Mar 2023 04:32 AM

பட்டு தொழிலில் சிறந்து விளங்கும் விவசாயிகள், நூற்பாளர்களுக்கு பரிசு - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழகத்தில் பட்டு தொழிலில் சிறந்து விளங்கும் பட்டு விவசாயிகள், தானியங்கி, பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு ரூ.6.75 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் 2022-2023 -ம் ஆண்டிற்கான பட்டுவளர்ச்சித் துறை மானியக்
கோரிக்கையில், அறிவிக்கப்பட்டபடி, பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்டம் வாரியாக மூன்று சிறந்த பட்டு விவசாயிகளும், மாநில அளவில் மூன்று சிறந்த பட்டு விவசாயிகளும், மூன்று சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளர்களும், மூன்று சிறந்த பலமுனை பட்டு நூற்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசு ரூ.1 லட்சத்தை திருப்பூர்- ர. ரமேஷ், 2-ம் பரிசு ரூ.75 ஆயிரத்தை தென்காசி- மு. சமுத்திரம் 3-ம் பரிசு ரூ.50 ஆயிரம் தருமபுரி -ப.சங்கர் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

முதல் பரிசு ரூ.1 லட்சம்: மேலும், சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசு ரூ.1 லட்சம் திருப்பூர்- ஆர்.பெருமாள், 2-ம் பரிசு ரூ.75ஆயிரம் கிருஷ்ணகிரி ச.சேகர், 3-ம் பரிசு ரூ.50 ஆயிரம் திருப்பூர் - நா.முரளிகிருஷ்ணன், மாநில அளவில் சிறந்த பலமுனை பட்டு நூற்பாளருக்கான முதல்பரிசு ரூ.1லட்சம் தருமபுரி- மு.ஜெயவேல், 2-ம் பரிசு ரூ.75 ஆயிரம் கரூர்-வே.மோகன்ராஜ், 3-ம் பரிசு ரூ.50 ஆயிரம் தருமபுரி- ஜெ.வேதவள்ளி ஆகியாருக்கு வழங்கப்பட்டது. இவ்வாறாக மொத்தம் ரூ.6.75 லட்சம் பரிசுத்தொகையை 9 விருதாளர்களுக்கு முதல்வர் மு.க..ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, கைத்தறித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பட்டு வளர்ச்சி இயக்குனர் ஜெ.விஜயாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x