Published : 09 Mar 2023 06:56 AM
Last Updated : 09 Mar 2023 06:56 AM

சென்னை | மின்வாரியம் பெயரில் மோசடி குறுஞ்செய்தி அனுப்பிய கும்பல் கண்டுபிடிப்பு

சென்னை: `இன்று இரவுக்குள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என மின்வாரியம் பெயரில் போலி குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட்ட கும்பலை மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

வீடுகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் மின்சார அளவை கணக்கெடுத்த 20 நாட்களுக்குள், அதற்கான பணத்தை மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதத்துடன் கட்டணத்தைச் செலுத்திய பிறகு மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.

மின்கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை நுகர்வோருக்கு மின்வாரியம் குறுஞ்செய்தி மூலம் அனுப்புகிறது. வடமாநிலத்தில் பதுங்கல் இந்நிலையில் அண்மைக் காலமாக, `முந்தைய மாத மின்கட்டணத்தைச் செலுத்தாததால் இன்று இரவுக்குள் மின்சாரம் துண்டிக்கப்படும்.

உடனே, இந்த எண்ணில் கட்டணம் செலுத்தவும்' என மோசடி கும்பல் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. அதை உண்மை என நம்பி சிலர் பணம் கட்டி ஏமாந்தனர். இதையடுத்து, மின்கட்டணம் தொடர்பாக வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்.

நுகர்வோர் விழிப்புடன் இருக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தியது. அத்துடன், இது தொடர்பாக போலீஸிலும் புகார் அளித்தது. மேலும், மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவும் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தியது.

விசாரணையில் வதந்தி பரப்பி மோசடியில் ஈடுபட்ட கும்பல் வடமாநிலம் ஒன்றில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள்விரைவில் கைது செய்யப்படுவார்கள் என மின்வாரிய விஜி லென்ஸ் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x