Published : 08 Mar 2023 06:20 PM
Last Updated : 08 Mar 2023 06:20 PM
சென்னை: "வீடு - வணிகம் - சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில் முனைவுகளுக்காகக் கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில், தமிழ்நாட்டுப் பெண்கள் இரண்டாம் இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என்பது சர்வதேச மகளிர் தினம் 2023-இல் மகிழ்ச்சியான செய்தி" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தலைப்பைப் பார்த்தால் எதிர்மறையாக இருக்கலாம்; உண்மையில் அது நேர்மறையானதே.. வீடு - வணிகம் - சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில் முனைவுகளுக்காகக் கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில், தமிழ்நாட்டுப் பெண்கள் இரண்டாம் இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என்பதுதான் அந்தச் செய்தி.
பெண்களின் சமூகப் பங்களிப்பு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகம்; அதிலும், தமிழ்நாட்டுப் பெண்கள் எந்தளவுக்குப் பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தும் அந்தச் செய்தி, சர்வதேச மகளிர் தினம் 2023-இல் மகிழ்ச்சியான செய்தி. மகளிர் உயர மாநிலம் உயரும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT