Published : 08 Mar 2023 02:54 PM
Last Updated : 08 Mar 2023 02:54 PM
சென்னை: தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தவறாக வந்த செய்திக்கு போக்குவரத்து துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 1000 வழங்கப்பட இருப்பதாகவும், அதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000 நிவாரணத் தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதுபோன்ற அறிவிப்பு எதுவும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை. இது தவறான தகவல் ஆகும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுவதுடன் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுபோன்ற தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT