Published : 06 Mar 2023 06:39 AM
Last Updated : 06 Mar 2023 06:39 AM

குளிர்சாதன பேருந்தை விதிமுறைப்படி இயக்க வேண்டும்: மாநகர போக்குவரத்து அதிகாரி உத்தரவு

சென்னை: குளிர்சாதன பேருந்துகளை விதிமுறைகளைப் பின்பற்றி இயக்க வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் முதலில் பேருந்தை ஆன் செய்த பிறகுதான் டிஜிட்டல் போர்டை ஆன் செய்ய வேண்டும். அதேபோல் முதலில் டிஜிட்டல் போர்டு, பின்னர் குளிர்சாதனம், இறுதியாகப் பேருந்தை ஆப் செய்ய வேண்டும். அனைத்து கதவுகளையும் மூடிய பிறகே பேருந்தை இயக்க வேண்டும்.

குளிர்சாதன கருவியின் தட்ப வெப்பத்தைப் பொருத்தவரை பகலில் 24 அல்லது 25 டிகிரி செல்சியஸ் மற்றும் இரவில் 27 டிகிரி செல்சியஸ் வைத்து பேருந்தை இயக்கவேண்டும்.

குறிப்பாகப் பள்ளம் மற்றும் வேகத்தடையில் பேருந்தைக் கவனமாக ஏற்றி இறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை மாநகரபோக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன பேருந்து ஓட்டுநர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இத்தகைய விதிகளைப் பின்பற்றினால் மட்டுமே பாதுகாப்பான பயணத்தை வழங்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x