Published : 06 Mar 2023 06:53 AM
Last Updated : 06 Mar 2023 06:53 AM

கொசு பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை தேவை: முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் கொசு பெருக்கத்தைஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

வடசென்னை தென்கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ராயபுரம் தொகுதியில் நடைபெற்றமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற டி.ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வருகிறது. பலர் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். மருத்துவமனைகளில் போதிய மருந்துகளும் இல்லை.

மாநகரப் பகுதியில் கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே, கொசு உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே ஒழிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தேவையான மருந்துகளை வைத்து, தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு வழங்க வேண்டும்.

கடும் நடவடிக்கை தேவை: புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வைக்கூட முறையாக நடத்த முடியாதஅரசாக திமுக அரசு உள்ளது.

மூலகொத்தளம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பெறும் பயனாளிகள் ரூ.3.50 லட்சம் செலுத்த வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. அந்த தொகையை தவணைமுறையில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x