Published : 06 Mar 2023 06:48 AM
Last Updated : 06 Mar 2023 06:48 AM

சென்னையில் தனியார் பேருந்தை இயக்க சிஐடியு கண்டனம்

சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் 1,000 தனியார் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் அனுமதி வழங்கவுள்ளது.

இதற்கான அறிவுரைகளை வழங்க ஆலோசகர் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பையும் மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவரம்:

அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு): சென்னையில் அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால்வரும் காலத்தில் அரசு பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு சிஐடியு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் இன்று (மார்ச் 6) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வி.கே.சசிகலா: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்தனியார் பேருந்துகளை ஒப்பந்தஅடிப்படையில் இயக்க முடிவுஎடுத்து இருப்பது கண்டனத்துக்குரியது. இது மக்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காது என தொழிற்சங்கத்தினர் கருதுகின்றனர். இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் அழிந்துபோகும் அவலநிலைக்கு தள்ளப்படும்.

எனவே இவ்விவகாரத்தில் அரசு லாப நஷ்டத்தை கணக்குபார்ப்பதை விட்டுவிட்டு சேவை மனப்பான்மையோடு செயல்பட வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x