Last Updated : 02 Sep, 2017 08:55 AM

 

Published : 02 Sep 2017 08:55 AM
Last Updated : 02 Sep 2017 08:55 AM

விபத்தின்போது உதவும் ‘லாக் ஸ்கிரீன் மெசேஜ்’ வசதி

ஸ்மார்ட் போன்களில் பலரும் அறியாத வசதியாக ‘லாக் ஸ்கிரீன் மெசேஜ்’ எனும் தகவல் பதிவு வசதி உள்ளது. விபத்து காலங்களில் இது பயனளிக்கும். ஒருவர் விபத்தில் சிக்கும்போது அவருக்கு வேண்டியவர்களுக்கு தகவல் தெரிவிக்க உதவியாக இருப்பவை விபத்தில் சிக்கியவரிடம் இருக்கும் அடையாள அட்டைகளும், செல்போனும்தான். அடையாள அட்டையை வைத்திருக்காவிட்டால், செல்போன் மட்டுமே தகவல் தெரிவிக்க ஒரே வழி.

ஆனால், ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் பலர் ஸ்கிரீன் லாக் வசதியை பயன்படுத்துகின்றனர். இதனால், விபத்தின்போது உதவ முன்வருபவர்கள் படுகாயமடைந்தவரின் செல்போனில் உள்ள உறவினர்களின் எண்களை பார்க்க முடியாமல் போகிறது. இதை தவிர்க்க விபத்தில் சிக்கியவரின் செல்போனில் ‘லாக் ஸ்கிரீன் மெசேஜ்’ல் தகவல்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு இருந்தால், ஸ்கிரீன் லாக் செய்திருந்தாலும் முகப்பு திரையில் தோன்றும் முக்கிய செல்போன் எண்ணை பயன்படுத்தி விபத்தில் சிக்கியவரின் குடும்பத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க முடியும்.

பதிவு செய்யும் முறை: செல்போன் செட்டிங்கில் ‘லாக் ஸ்கிரீன்’ ஆப்சன் இருக்கும். அதில், ‘ஓனர் இன்ஃபோ’ அல்லது ‘லாக் ஸ்கிரீன் மெசேஜ்’ என்பதை டிக் செய்து, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டியவரின் பெயர் மற்றும் மொபைல் எண்களை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால் அத்தகவல் நம்முடைய செல்போனின் முகப்பு திரையில் தெரியும். இதன்மூலம் ‘ஸ்கிரீன் லாக்’ செய்தாலும் அந்த தகவலை பார்க்க முடியும்.

ஒவ்வொரு நிறுவன செல்போனுக்கு ஏற்றவாறு செட்டிங் முறையில் வேறுபாடு இருப்பதால், லாக் ஸ்கிரீன் மெசேஜ் வசதியை எப்படி பயன்படுத்துவது என அந்த மாடல் எண்ணை குறிப்பிட்டு இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x