Last Updated : 16 Jul, 2017 01:01 PM

 

Published : 16 Jul 2017 01:01 PM
Last Updated : 16 Jul 2017 01:01 PM

கமல் மீது வன்கொடுமை தடை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும்: சிவி சண்முகம்

நடிகர் கமலஹாசன் மீது வன்கொடுமை தடை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று அமைச்சர் சிவி சண்முகம் வலியிறுத்தியுள்ளார்.

விழுப்புரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா வருகின்ற ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான கால்கோள்விழா இன்று காலை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இவ்விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம், ஆட்சியர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவி சண்முகம் கூறியதாவது;

"ஓபிஎஸ் திமுகவுடன் கள்ள உறவு வைத்திருப்பதால்தான் முதல்வர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். தினகரனை மீண்டும் கட்சி விவகாரத்தில் சேர்ப்பது பற்றி அனைவரும் கூடி முடிவெடுப்போம். கமலஹாசன் இன்று படவாய்ப்புகள் இல்லாத நடிகராகிவ்ட்டார். பணம் அவருக்கு பிரதானம் ஆகிவிட்டது. பெண்களைப்பற்றி அவர் உயர்வாக பேசத் தகுதி இல்லாதவர். ஏனெனில், தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார். அவர் எங்களைப்பற்றி, இந்த நாட்டு மக்களைப்பற்றி பேச அருகதையற்றவர். மேலும் கமலஹாசன் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், சமூகத்தில் பின் தங்கிய மக்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் தரம்தாழ்த்தி பேசி தன் மேலாதிக்க, சாதி உணர்வைக் காட்டியுள்ளார். அவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x