Published : 01 Mar 2023 06:48 PM
Last Updated : 01 Mar 2023 06:48 PM
சென்னை: சென்னை எல்ஐசி மெட்ரோ மற்றும் சோழிங்கநல்லூரின் அருகில் உள்ள பகுதிகளை மேம்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி திட்டத்தை (Transit oriented development) செயல்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது. சென்னை அண்ணா சாலையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த சிஎம்டிஏ முடிவு திட்டமிட்டுள்ளது. தற்போது இந்தத் திட்டத்தில் அருகில் உள்ள இடங்களையும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி எல்ஐசி மெட்ரோ மற்றும் சோழிங்கநல்லூரைச் சுற்றி உள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் (Detailed Neighbourhood plans) தயார் செய்யப்படவுள்ளது.
இதன்படி, இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் அதிக தெருக்கள் அமைக்கப்படும். ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு குறைந்தது 18 கி.மீ நீளத்திற்கு தெருக்கள் இருக்கும். மேலும், அதிக மக்கள் வசிக்கும் வகையில் இது மாற்றப்படும். ஒரு ஏக்கருக்கு 61 பேர் வசிக்கும் வகையில் இந்தப் பகுதியில் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும், இந்தப் பகுதியில் கட்டிடத் தளப் பரப்பு குறியீடு அதிகரிக்கப்படும். அனைத்து நிறுவனங்களும் அமையும் வகையில் நிலப்பரப்பு வகை மாற்றம் செய்யப்படும். இதன் காரணமாக வீடுகள் மற்றும் பல்வேறு வணிகம் சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் உருவாகும்.
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து, அதற்கு அருகில் உள்ள பகுதியை அனைத்து வசதிகளும் கொண்ட பகுதியாக மாற்ற சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT