Published : 01 Mar 2023 11:07 AM
Last Updated : 01 Mar 2023 11:07 AM
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இன்று (மார்ச் 1) கொண்டாடப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 'மார்ச் 1 திராவிட பொன்நாள்' முயற்சி... முயற்சி... முயற்சி... அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என்று கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன்பிறகு, அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து தொண்டர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்களுக்கு மஞ்சள்பையுடன், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
"மரத்தை நாம் வளர்த்தால்
மரம் நம்மை வளர்க்கும்!" என்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அவரது சொற்படி இந்த ஆண்டும் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தேன். (1/2) pic.twitter.com/tCTQ6LQO5u— M.K.Stalin (@mkstalin) March 1, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT