Published : 28 Feb 2023 12:24 PM
Last Updated : 28 Feb 2023 12:24 PM

தேவையில்லாமல் ஒரு மரம் கூட வெட்டப்படக்கூடாது: அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் தேவையில்லாமல் ஒரு மரம் கூட வெட்டப்படக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் சாலையோரம் இருந்த 40 ஆண்டு ஆலமரம் சட்டவிரோதமாக வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. ஆலமரம் வெட்டப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து பசுமைத்தாயகம் அமைப்பும், பொதுமக்களும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க, கிளைகளை மட்டுமே வெட்ட அரசு அனுமதி அளித்த நிலையில் ஒட்டு மொத்த மரமும் சிலரால் வீழ்த்தப்பட்டது பெருங்குற்றம். இதற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

40 ஆண்டுகள் அரும்பாடுபட்டு வளர்க்கப்பட்ட ஆலமரம் சிலரின் சுயநலத்திற்காக வீழ்த்தப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. வெட்டப்பட்ட ஆலமரத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டு பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தேவையில்லாமல் ஒரு மரம் கூட வெட்டப்படக்கூடாது. அதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட மாநில, மாவட்ட பசுமைக் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் முழு அளவில் செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x